தோட்டத்து வீட்டில் தீ விபத்தில் ரூ.1½ லட்சம் ெராக்கம், 15 பவுன் தங்க நகைகள் தீயில் கருகி நாசம்
உடுமலை அருகே தோட்டத்து வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் ெராக்கம், 15 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது.
உடுமலை அருகே தோட்டத்து வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பீரோவில் இருந்த ரூ.1½ லட்சம் ெராக்கம், 15 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமானது.
விவசாயி
உடுமலையை அடுத்த அந்தியூர் சடையக்கவுண்டன்புதூர் பகுதியில் தோட்டத்தில் உள்ள ஓட்டு வீட்டில் லட்சுமணன் (வயது 48) என்பவர் குடும்பத்துடன் வசித்தபடி விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கோவில் திருவிழாவுக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் இந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பலத்த போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் வீட்டின் மேற்கூரை மற்றும் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன.
நகை, பணம் நாசம்
இந்த தீ விபத்தில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம், 15 பவுன் நகைகள் கருகி நாசமானது. மேலும் நிலப்பத்திரம், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், ரேஷன் அட்டைகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், பிறப்பு, இறப்பு, வாரிசு சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், டிராக்டர், மொபட் பதிவுச் சான்றிதழ்கள், ஏ.டி.எம். அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தீயில் கருகியது.
இதுதவிர டி.வி., பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், கட்டில்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் வீட்டுக்கு தீ வைத்து சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.