பந்தல் துணி-நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


பந்தல் துணி-நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x

மன்னார்குடியில் கீற்று கொட்டகையில் தீப்பிடித்து பந்தல் துணி- நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருவாரூர்

மன்னார்குடி:-

மன்னார்குடியில் கீற்று கொட்டகையில் தீப்பிடித்து பந்தல் துணி- நாற்காலிகள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாயின.

வாடகை பாத்திர கடை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி டெப்போ ரோடு கொத்தவள்ளிஅம்மன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 55). இவர் மன்னார்குடி கீழராஜவீதியில் வாடகை பாத்திர கடை மற்றும் டெக்கரேஷன் மையம் நடத்தி வருகிறார். இவருடைய வீட்டின் மாடியில் கீற்று கொட்டகை உள்ளது.

இந்த கொட்டகையில் பாத்திரங்கள் மற்றும் அலங்கார பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கொட்டகையில் தீப்பிடித்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.1 லட்சம் பொருட்கள்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கொட்டகையில் இருந்த பந்தல் துணி, நாற்காலிகள், பாத்திரங்கள், அலங்கார பொருட்கள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது நகரசபை துணைத்தலைவர் கைலாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story