Normal
மயிலம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்
மயிலம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பலானது.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், வெங்கடேஷ். இவர்கள் ஒரே கூரை வீட்டில் தனித்தனி குடும்பமாக வசித்துவந்தனர். நேற்று வீட்டை பூட்டி வீட்டு அனைவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, கூரை வீடு பற்றி எரிந்தது. தகவல் அறிந்த திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் அலுவலர் கதிர்வேலு தலைமையில் வரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பாலனது. மேலும், ஸ்ரீதர் வீட்டில் இருந்த 6 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் ஆகியனவும் தீக்கிரையானது. இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story