மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து


மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து
x

அம்பை கோவிலில் மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து

திருநெல்வேலி

அம்பை:

அம்பை காசிநாத சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் கோபுரத்தில் வர்ணம் பூசுவதற்காக மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட சாரத்தில் நேற்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story