இறந்தவரின் உடலை தகனம் செய்தபோது தீப்பிடித்து தொழிலாளி படுகாயம்


இறந்தவரின் உடலை தகனம் செய்தபோது தீப்பிடித்து தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள பன்னிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய உறவினர் உடல் நலக்குறைவால் பலியானார். அவருடைய உடலை அங்குள்ள மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது முருகன் உள்ளிட்டோர் உறவினரின் உடலுக்கு தீ வைத்தனர். அப்போது திடீரென முருகன் மீது தீப்பிடித்தது. இதில் அவருடைய வயிறு, மார்பு கருகியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story