தீ விபத்து


தீ விபத்து
x

அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூர் அருகே படந்தாலையை சேர்ந்த ரமேஷ் (வயது 49). இவர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் சாலையில் பார்சல் சர்வீஸ் அலுவலகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கணினி மற்றும் வெளியூருக்கு அனுப்ப வேண்டிய பார்சல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story