சிங்கம்புணரி வாரச்சந்தையில் தீ விபத்து


சிங்கம்புணரி வாரச்சந்தையில் தீ விபத்து
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி வாரச்சந்தையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வாரச்சந்தையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

வாரச்சந்தையில் திடீர் தீ

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை உள்ளது. 152 கடைகள் கொண்ட வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறும்.

இந்த நிலையில் வாரச்சந்தை கட்டிடத்தில் உள்ள ஒரு கடையில் நேற்று மதியம் திடீரென புகை மண்டலத்துடன் தீப்பற்ற ஆரம்பித்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்

இது குறித்து தகவல் அறிந்ததும் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி, கவுன்சிலர் திருமாறன் உள்ளிட்டோர் விரைந்து சென்றனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து செயல் அலுவலர் தனுஷ்கோடி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story