குப்பை குடோனில் தீ விபத்து
அடுக்கம்பாறையில் குப்பை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
வேலூர்
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பிணவறை அருகே உள்ள குப்பை குடோனில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை ஒப்பந்த பணியாளர்களை கொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட கரும்புகை அந்த பகுதியை சூழ்ந்து கொண்டது. அந்த வழியாக சென்ற வானகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். தகவலறிந்த மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story