ராசாமிராசுதார் ஆஸ்பத்திரி வளாகத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு
தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீயினால் நோயாளிகள், உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீயினால் நோயாளிகள், உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.தமிழகத்தில் பிரசவம் அதிகம் நடைபெறும் ஆஸ்பத்திரிகளில் இதுவும் ஒன்று என்பதால் இந்த ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் பின்பகுதியில் 24-வது வார்டு உள்ளது.
திடீர் தீ
இந்த வார்டு அருகே குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. இந்த குப்பையில் நேற்று இரவு திடீரென தீ பற்றிக்கொண்டது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த பட்டுப்போன மரத்திலும் தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததை பார்த்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
இதைத்தொடர்ந்துெமாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.