தீயில் எரிந்து கூரை வீடு நாசம்


தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
x

கூத்தாநல்லூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமடைந்தது.

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி, மரக்கடை கீழத்தெருவைச் சேர்ந்தவர் யூனூஸ் (வயது55). இவரது கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பொருட்கள் சேதம் அடைந்தன


Next Story