கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ
கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு - அழகாபுரி செல்லும் சாலையில் மகாராஜபுரம் அருகே செல்லப்பழம் என்பவர் தென்னை மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல ஆலையில் அவர் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது நேற்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 8 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தொழிற்சாலையில் பற்றிய தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு நேரம் என்பதால் பணியில் யாரும் இல்லை. இதனால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா அல்லது மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதா என பல்வேறு கோணங்களில் வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.