கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ


கயிறு தயாரிக்கும் ஆலையில்  தீ
x

ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானது.

கயிறு தயாரிக்கும் ஆலை

ராஜபாளையத்தை சேர்ந்த குருநாதன் என்பவர் சேத்தூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள நிலத்தை தரை வாடகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

இந்த ஆலை வளாகத்தில் சேத்தூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் 1 டன் எடையுள்ள தேங்காய் மட்டைகளை இருப்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆலை வளாகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் மீட்பு குழுவினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் தேங்காய் மட்டைகள் மொத்தமாக எரிந்ததால் கூடுதலாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு 2 வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்து

தீ எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் கயிறு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் அதிகமாக இருப்பதால் அவற்றில் பரவாத வண்ணம் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் தேங்காய் மட்டைகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இந்த தீவிபத்து காரணமாக சேத்தூர் மற்றும் மேட்டுப்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story