மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து
விராலிமலையில் மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை
விராலிமலை-திருச்சி சாலையில் மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை முதல் தளத்தில் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் விராலிமலையில் மின்சாரம் நிறுத்தம் என்பதால் கடை உரிமையாளர் அழகர் வழக்கம்போல் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் அந்த கடையில் இருந்து நேற்று காலை கரும்புகை வெளியேறியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கதவின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகியது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story