பெட்டிக்கடையில் தீ விபத்து


பெட்டிக்கடையில் தீ விபத்து
x

வேலூரில் பெட்டிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரையொட்டி வெளிப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு மர்மநபர்கள் நேற்று மாலை தீ வைத்துள்ளனர். சிறிதுநேரம் அந்த குப்பைகள் எரிந்து கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. திடீரென அருகே இருந்த பெட்டிக்கடைக்கு தீ பரவி பற்றி எரிந்தது. இதைக்கண்ட அருகே உள்ள கடைக்காரர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதில், பெட்டிக்கடையின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து நாசமாயின. கடையில் பொருட்கள் எதுவும் இல்லை. அதன் உரிமையாளர் யார் என்பது குறித்து உரிய தகவல்கள் கிடைக்கவில்லை என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story