அட்டை கம்பெனியில் தீவிபத்து
நெல்லை அருகே அட்டை கம்பெனியில் தீவிபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை அருகே பால்கட்டளை பகுதியில் தனியார் அட்டை, காகித கம்பெனி அமைந்துள்ளது. இங்குள்ள குடோனில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் புகை வெளியேறியது. பின்னர் தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள் கார்த்திகேயன், வெட்டும் பெருமாள் மற்றும் வீரர்கள் விரைந்து சென்றனர். 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அட்டைகள், காகிதங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story