பா.ம.க. பிரமுகரின் பூ கடைக்கு தீவைப்பு
திருவெண்ணெய்நல்லூர் அருகே பா.ம.க. பிரமுகரின் பூ கடை தீவைப்பு எாிக்கப்பட்டது.
விழுப்புரம்
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கம் மகன் பாலசுப்ரமணியன்(வயது 38). பா.ம.க. பிரமுகரான இவர் ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாறு அருகில் கொட்டகை அமைத்து பூக்கடை நடத்தி வருகிறார். இந்த கடை இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி பாலசுப்பிரமணியன் விரைந்து சென்றார். அதற்குள் கடை முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. பூக்கடைக்கு மர்மநபர்கள் தீயிட்டு எரித்திருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story