டயர் கடையில் தீ விபத்து
டயர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
அரியலூர்
அரியலூர் நகராட்சி அலுவலகம் எதிர் புறம் டயர் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் சையது நிஷார் முகமது. இவர் நேற்று மாலை கடைக்கு அருகில் இருந்த சந்தில் இருந்து புகை வருவதை கண்டு உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பழைய டயர்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை அணைத்ததால் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய டயர்கள் தப்பின. மேலும் கடையின் மாடியில் இஸ்லாமியர்களின் தொழுகை செய்யும் மசூதி அமைந்துள்ளது. அங்கு புகைமூட்டத்தில் சிக்கியிருந்த இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story