வடசென்னை அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
வடசென்னை அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலையத்தின் 2வது நிலை 2வது அலகில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை ரசாயன நுரை, தண்ணீரை பீய்ச்சி அடித்து பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் 2வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story