பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு-பேரிடர் மீட்பு பயிற்சி


பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு-பேரிடர் மீட்பு பயிற்சி
x

பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு-பேரிடர் மீட்பு பயிற்சி

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கு என்.சி.சி. முகாம் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் நடந்து வருகிறது. இதையொட்டி தீயணைப்பு- மீட்பு துறை சார்பில் பேரிடர் மற்றும் தீத்தடுப்பு பயிற்சி நடந்தது. திருவாரூர் தீயணைப்பு நிலைய திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினர் மாணவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் மீட்பு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பது, தீயை அணைப்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் என்.சி.சி. கமாண்டர் பிரைட் மற்றும் 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story