தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
சிக்கல் அருகே தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
சிக்கல்:
சிக்கல் அருகே ஆவராணி அனந்த நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கீழ்வேளூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தீப்பிடித்தால் அதை எப்படி அணைப்பது, தீயின் வகைகள், தீயணைப்பு கருவியை பயன்படுத்தும் விதம், வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் ஆறு குளங்களில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, தீ விபத்து ஏற்படும்போது எப்படி நடந்து கொள்வது, தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன்பு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜ சோழன் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.