சலவை துணிகளுக்கு தீ வைப்பு


சலவை துணிகளுக்கு தீ வைப்பு
x

சலவை துணிகளுக்கு தீ வைப்பு

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை டவுன் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் (வயது 47), லட்சுமி (50). சலவை தொழிலாளர்களான இவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள், ஆஸ்பத்திரிகளில் துணிகளை வாங்கி வந்து, சலவை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று டவுனில் உள்ள ஒரு கோவில் வளாகத்தில் உள்ள தொட்டியில் சலவை செய்வதற்கான துணிகளை மூட்டைகளாக கட்டி வைத்திருந்தனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது துணி மூட்டைகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகி கிடந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து சுப்பிரமணியன், லட்சுமி ஆகியோர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துணி மூட்டைகளுக்கு தீ வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story