தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து


தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து
x

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவா் ரமேஷ் (வயது 43). இவா், விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்தநிலையில், இன்று தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள தேங்காய் நாரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை, இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார்கள் தீயில் எரிந்து நாசமானது.


Next Story