தேங்காய் நார் கழிவுகளில் தீ


தேங்காய் நார் கழிவுகளில் தீ
x

தேங்காய் நார் கழிவுகளில் தீ பிடித்து எரிந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் சந்தைப்பேட்டை பகுதியில் மூங்கில் கூடை, கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளின் பின்பகுதியில் தேங்காய் நார் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இந்த கழிவுகளில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அப்பகுதியினர் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தேங்காய் நார் கழிவுகள் எரிந்து நாசமாகின. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


Related Tags :
Next Story