கூடலூரில் மெக்கானிக் கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்


கூடலூரில் மெக்கானிக் கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் மெக்கானிக் கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

நீலகிரி

கூடலூர்

கூடலூர் துப்புக்குட்டிபேட்டையில் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் ஷக்கீர். இவரது கடையின் அருகே சிறிய ஓட்டல் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு மெக்கானிக் கடையின் மேற்கூரை வழியாக புகை வெளியேறியது. இதனால் பொதுமக்கள் அருகே சென்று பார்த்தனர்.அப்போது கடைக்குள் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் தீயும் மளமளவென வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ உடனடியாக அணைய வில்லை. கடைக்குள் வாகன டயர்கள், ஆயில் மற்றும் உதிரிபாக பொருட்களில் தீ நன்கு பரவியது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட முயற்சிக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஏசு மரியான், ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் மற்றும் மின்வாரிய துறையினர் விரைந்து வந்தனர். தொடர்ந்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, மெக்கானிக் கடைக்குள் தீ பரவியதற்கான காரணம் தெரியவில்லை. ஓட்டல் அருகே உள்ளதால் சமையலறையில் இருந்து தீ பரவி இருக்கலாம். இல்லையெனில் மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம். தொடர் விசாரணைக்குப் பிறகு முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story