காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.
x

காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் அருகே பஞ்சு அரைக்கும் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானது.

பஞ்சு அரைக்கும் மில்

காங்கயம் அருகே படியூர் பகுதியில் அப்துல்சலாம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு அரைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் தொழிற்சாலையில் பஞ்சு அரைக்கும் எந்திரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக தீ பற்றி எரிய தொடங்கியது. பின்னர் தீ மளமள வென மில் முழுவதும் பரவியது. உடனே அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியாததால் காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை அணைக்க போராடினர்.

எந்திரங்கள் சேதம்

சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் பஞ்சு அரைக்கும் எந்திரங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story