கடலூரில் தீ விபத்து: 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்


கடலூரில் தீ விபத்து: 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமானது.

கடலூர்

கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இந்நிலையில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த தமிழ்செல்வம் என்பவரது கூரை வீட்டுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

இதனால் அவர்கள், கடலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் மின்கசிவு காரணமாக கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்ததா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story