தீக்காயமடைந்தவர் சாவு


தீக்காயமடைந்தவர் சாவு
x

ஒரத்தநாடு அருகே தீக்காயமடைந்தவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள மண்டலக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்த மாரிமுத்து. இவருடைய மகன் கரிகாலன் (வயது40). இவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தீக்காயத்துடன் வீட்டுக்கு சென்ற கரிகாலனை அவரது உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கரிகாலன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story