சுடுகாடு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்


சுடுகாடு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
x

போளூர் அருகே சுடுகாடு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

போளூர் தாலுகா ஆத்துவாம்பாடி கிராமம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் வாழும் இடத்திற்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் சுடுகாடுக்கு செல்லும் வசதி எதுவும் இல்லை.

இதனால் நாங்கள் இறந்தவர்கள் உடலை எடுத்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம்.

எங்கள் ஊராட்சியில் சுடுகாடு இல்லாததால் பக்கத்து கிராமத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கு கொண்டு செல்ல மறுக்கின்றனர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே பலமுறை மனு கொடுத்து உள்ளோம்.

எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சுடுகாடு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story