காவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


காவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வேலூர் ஜெயிலில் காவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் தீ விபத்து உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வது மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பாக சிறை காவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்திய சிறை அருகே உள்ள கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் ஆண்கள் ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) செல்வமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து தடுப்பு குறித்து காவலர்களுக்கு செயல் விளக்கத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது, அதில் இருந்து தப்பித்தல், பிறரை காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி அளித்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிறை காவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.


Next Story