காவலர்களுக்கு தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் அத்துமீறி சோதனையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு குழுவை கண்டித்து அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொகுதி தலைவர் முகமது ரபி தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாவட்ட தலைவர் சலீம்கான், மாவட்ட செயலாளர் அசன்ஷா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பசீர் அகமத், தி.மு.மு.க. மாநில தலைவர் இக்பால், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story