பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் செயல் விளக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீ தடுப்பு குறித்தும், தீ விபத்தில் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்பது குறித்தும், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

தொடர்ந்து தீத்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கீதா உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story