தேசிய திறன் தேர்வில் நெல்லுக்கடை அரசு பள்ளி சாதனை
தொடர்ந்து 6-வது ஆண்டாக தேசிய திறன் தேர்வில் நெல்லுக்கடை அரசு பள்ளி சாதனை
நாகப்பட்டினம்
அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வரை மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுக்கு வழங்கப்படும். 2022- 2023-ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. நாகை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் தொடர்ந்து 6-வது ஆண்டாக நாகை நெல்லுக்கடை நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story