திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
x

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். அதையடுத்து தீ விபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்று தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜூ மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றினால் எவ்வாறு அணைக்க வேண்டும். மழைக்காலங்களில் சாலையின் குறுக்காக சாய்ந்து விழும் மரங்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு படைவீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதேபோல் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி எவ்வாறு தீயை அணைப்பது என்று பள்ளி மாணவிகளுக்கு தீயணைப்பு படைவீரர்கள் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story