திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீ தடுப்பு, மீட்பு பணிகள், பேரிடர் கால ஒத்திகை
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீ தடுப்பு, மீட்பு பணிகள், பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது.
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறை மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குழுவினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை நடத்தினர். மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் நீயோ ஜோசப், அரசு முதன்மை செயலாளர் பொதுப்பணித்துறை மற்றும் திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் கலந்து கொண்டார். இந்த ஒத்திகையில் தீ விபத்து ஏற்பட்டால் தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், தீ விபத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், மழை வெள்ளம் சூழ்ந்த கட்டிடத்தின் மேலே சிக்கிய பொதுமக்களை எவ்வாறு கயிறு, மற்றும் ஏணிப்படி மூலம் மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர போலீஸ் கமிஷனர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.