திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா


திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
x

செங்கத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது.

திருவண்ணாமலை

செங்கம்

செங்கம் டவுன் மில்லத் நகர்- போளூர் ரோட்டில் அமைந்துள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 136-ம் ஆண்டு அக்னி வசந்த விழா நடந்தது.

விழாவின் 4-ம் நாளான இன்று தீ மிதிவிழா நடந்தது.

இதையொட்டி செய்யாற்றங்கரையில் இருந்து கரகம் ஜோடித்து எடுத்து வந்தனர். பின்னர் கோவிலில் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அம்மனை வேண்டி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர்.

மேலும் நேற்று இரவு முதல் விடிய விடிய கோவில் வளாகத்தில் நாடகம் மற்றும் தெருக்கூத்து நடைபெற்றது.

விழாவில் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story