அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா


அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
x

சீர்காழி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் கிராமத்தில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 32-ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ந் தேதி கணபதி ஹோமத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று தீமிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சீர்காழி படித்துறை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி, அலகு காவடி, கரகங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு, தாடாளன் கோவில் வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், திரவியப்பொடி உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது. பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீசார் ஈடுபட்டனர்.






Next Story