மரத்தடியில் பட்டாசு உற்பத்தி; ஆலை உரிமையாளர் மீது வழக்கு
மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்த ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் உள்ள வி.சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அதிகாரி சகாயராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த பட்டாசு ஆலையில் விதிகளை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிவகாசி புதுதெருவை சேர்ந்த கார்த்திகேயன், போர்மென் சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story