தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை மீறினால் 3 ஆண்டு ஜெயில்


தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை மீறினால் 3 ஆண்டு ஜெயில்
x

பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும்

சென்னை,

பண்டிகை காலம் வரத்தொடங்கி உள்ளதால் ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் தீபாவளி பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வருவதை பயணிகள் தவிர்க்க வேண்டும் என சென்னை கோட்ட ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரு சிறிய தீப்பொறி கூட பயங்கரமான விளைவுகளுடன் ஒரு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும்.

குறிப்பாக ரெயில் பயணத்தின்போது பயணிகள் அவர்களது உடமைகளுடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பெட்ரோல், டீசல், மண்எண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, சிகரெட்டுகள், தீபாவளி பட்டாசுகள் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது.

இதையும் மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வெ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story