அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தர்மபுரி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்ததை வரவேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகம் முன்பு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி 4 ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிசாமி, நகர அவைத்தலைவர் அம்மா வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், நாகேந்திரன், நாகராஜன், செந்தில்வேல், மாவட்ட பிரதிநிதி முருகன், நிர்வாகிகள் பலராமன், அழகேசன், மோகன், மாதேஷ், பழனி, ஜம்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இண்டூர்-நல்லம்பள்ளி

இதேபோன்று இண்டூரில் ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் ரங்கன், நிர்வாகிகள் கேசவன், விஜயன், முனுசாமி, சின்னசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி பஸ் நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பிரேம்குமார், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் திருமால்வர்மா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கொளந்தைசாமி, நிர்வாகிகள் மூர்த்தி, மணி, காவேரி, ராகேஷ் சர்மா, மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரூர்

இதேபோன்று அரூர் ரவுண்டானா அருகில் வடக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் பாஷா, ஒன்றிய குழு துணை தலைவர் அருண், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனிசாமி, செல்வம், வக்கீல்கள் முத்துராஜா, தவமணி, மேகநாதன், சம்பத், அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள் ஜீவா ஜோதி, கனகராஜ், செந்தில், பூபாலன், தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் அரவிந்த், அஜித், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

பாலக்கோடு

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு ேக.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தொடர்ந்து அங்குள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மந்தைவெளியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொதுக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், அவைத்தலைவர் நாகராசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story