பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடக்கம்


பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடக்கம்
x

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடங்கியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடங்கியது.

கட்டிடம் கட்டும்பணி

வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் டான்பாமா பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஜனவரி 10-ந் பூமி பூஜையுடன் தொடங்கியது. ஆனால் கட்டிட பணி தொடங்கப்படாமல் இருந்த நிலையில் 3 மாதத்திற்கு பிறகு தற்போது பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிடம் கட்டும்பணி தொடங்கியுள்ளது.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஆராய்ச்சி மைய கட்டிடத்தில் பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.

அதேபோல் பட்டாசு ஆலையில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பட்டாசு ஆலையில் பயன்படுத்த முடியும்.

புகை மாசு இல்லாத பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் பெரிதும் உறுதுணையாக இருக்கும். இந்த கட்டிடப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு நிரந்தர ஆராய்ச்சி மையம் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story