துறைகளை மாற்ற முதல் அமைச்சருக்கே அதிகாரம் உண்டு: அமைச்சர் பொன்முடி பேட்டி


துறைகளை மாற்ற முதல் அமைச்சருக்கே அதிகாரம் உண்டு: அமைச்சர் பொன்முடி பேட்டி
x

முதல் அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.

சென்னை,

முதல் அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலகவேண்டுமென முதல் அமைச்சருக்கு கவர்னர் முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். ஒரு அமைச்சர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதனால் மட்டுமே அவர் பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. பாஜக அமைச்சர்கள் 33 பேர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் 2 துறைகளை 2 அமைச்சர்களுக்கு மாற்றக்கோரி பரிந்துரைத்த தமிழக அரசின் கடிதத்தை கவர்னர் ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலாக அதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளோம். அமைச்சரை முழுமையாக நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.

துறை மாற்றத்திற்கு கவர்னர் ஒப்புதல் பெற அவசியமில்லை. மரபு கருதி கடிதம் அனுப்பப்பட்டது. அமைச்சரவையை மாற்றுகிறோம் என்று காரணங்களை குறிப்பிட்டு கடிதம் அனுப்பினாலும், அதனை கவர்னர் திருப்பி அனுப்புகிறார். அமைச்சர்களின் துறைகளை ஏன் முதல் அமைச்சர் மாற்றுகிறார் என காரணம் கேட்க கவர்னருக்கு அதிகாரமும், உரிமையும் இல்லை.

கவர்னர் பாஜகவின் ஏஜெண்டாகவும் தமிழக அரசின் அதிகாரங்களில் அதிகம் தலையிடுபவராகவும் இருக்கிறார். அரசியில் சட்டத்திற்கும் மாநில சுயாட்சிக்கும் எதிராக கவர்னர் செயல்படுகிறார்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


Next Story