முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்
கீழக்கரையில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
ராமநாதபுரம்
கீழக்கரை,
கீழக்கரை மேலத்தெரு தனியார் பள்ளியில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.மேலும் கடந்த முகாமில் காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்த 70 பேருக்கு நகர்மன்ற துணை தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் தலைமையில் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் 17-வது வார்டு பயாஸ், 15-வது வார்டு டெல்சி, காஞ்சிரங்குடி கிராம அலுவலர் சிவபால நாதன், கீழக்கரை கிராம அலுவலர் சபீதா மற்றும் மக்கள் டீம் நிர்வாகிகள் ஹாஜி, அசன், கஸ்ஸாலி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story