'இலக்கிய மலர் 2023' எனும் இதழை வெளியிட்டார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்


இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார்  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக 'இலக்கிய மலர் 2023' உருவாக்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'இலக்கிய மலர் 2023' என்ற சிறப்பு மலரினை தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் எவ்வாறு படைக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக 'இலக்கிய மலர் 2023' உருவாக்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Related Tags :
Next Story