மழை பாதிப்பு ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .
சென்னை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.சென்னையிலும் கடந்த இரு தினங்களாக கன முதல் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்பு,எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story