பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி ,மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் தாயார் ஹீரோபென் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story