முதுகலை பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவா் சேர்க்கை; 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


முதுகலை பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவா் சேர்க்கை; 16-ந்  தேதி வரை விண்ணப்பிக்கலாம்
x

முதுகலை பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவா் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு www.tngasapg.in என்ற இணையதள முகவரி மூலம் வருகிற 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரி மாவட்ட மாணவ சேர்க்கை உதவி மையமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளில் தமிழ், ஆங்கிலம், சமூகப்பணி, வணிகவியல் துறைகள் செயல்படுகிறது, என்று கல்லூரியின் முதல்வர் ரேவதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story