முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க உள்ளது.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இக்கல்லூரியில் உள்ள பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.பி.ஏ. மற்றும் பி.எஸ்.டபிள்யூ. ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு பாடப்பிரிவுக்கு 60 இடங்கள் வீதம் 360 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அரசு இட ஒதுக்கீட்டின்படியும், உயர் கல்வி துறை வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படியும் நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வு நாளை(திங்கட்கிழமை) சிறப்பு ஒதுக்கீடுக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பி.எஸ்சி. கணிதம் மற்றும் பி.எஸ்.டபிள்யூ., 31-ந் தேதி(புதன்கிழமை) பி.காம் பிரிவுக்கும் 1-ந் தேதி( வியாழக்கிழமை) பி.பி.ஏ., 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) பி.ஏ.தமிழ், 3-ந் தேதி (சனிக்கிழமை) பி.ஏ. ஆங்கிலம் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும் போது அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார்கார்டு மற்றும் சேர்க்கை கட்டணத்துடன் வர வேண்டும். குறித்த தேதியில் குறித்த நேரத்தில் கலந்தாய்வுக்கு வர வேண்டும். இந்த தகவலை கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தெரிவித்து உள்ளார்.