வேலூரில் மீன், இறைச்சி கடைகள் வெறிச்சோடின
புரட்டாசி மாதத்தையொட்டி வேலூரில் மீன், இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேலூர்
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் மீன், இறைச்சியை சாப்பிடாமல் தவிர்ப்பார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் மீன், இறைச்சி விற்பனை மிகவும் குறைவாக காணப்படும்.
வேலூர் மீன்மார்க்கெட்டில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கு ஞாயிற்றுக்கிழமையில் 100 முதல் 120 டன் மொத்தம், சில்லரை முறையில் விற்பனையாகும்.
புரட்டாசி மாதத்தையொட்டி மீன்மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனை மந்தமாக இருந்தது. பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதனால் மீன்கள் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோன்று ஆடு, கோழி இறைச்சி விற்பனை கடைகளும் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடின.
Related Tags :
Next Story