மீன்வளர்ப்பு குட்டை ஏலம்


மீன்வளர்ப்பு குட்டை ஏலம்
x
தினத்தந்தி 28 Feb 2023 4:14 PM IST (Updated: 28 Feb 2023 5:08 PM IST)
t-max-icont-min-icon

மீன்வளர்ப்பு குட்டை ஏலம்

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மருதுறை ஊராட்சிக்கு உட்பட்ட காளிவலசு கிராமத்தில் உள்ள மீன் வளர்ப்பு குட்டைக்கு 2023-2024-ம் ஆண்டிற்கான ஆயம் வசூல் செய்யும் உரிமம் ஏலம் விடப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் ரூ.1,900-க்கு ஏலம் எடுத்தார்.

இந்த ஏலத்தில் இவருடன் சேர்ந்து 2 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஏலம் எடுத்தவர்கள் மீன்வளர்ப்பு குட்டைக்கு எவ்வித பாதிப்பும் நேராமல், பயன்களை மட்டும் அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.

----


Next Story