தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
உலக மீன்வள தினத்தையொட்டி தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடந்தது
உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும் ஆற்றில் மீன் பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் பெருகிவரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திட ஏதுவாகவும் ஆறுகளில் நன்நீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி கோடகநல்லூர் கிராமம் தாமிரபரணி ஆற்றில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் தலைமை தாங்கினார். அவர் சுமார் 1.6 லட்சம் ரோகு மிருகால் மற்றும் சேல் கெண்டை மீன் குஞ்சுகளை தாமிரபரணி ஆற்றில் விட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் புஸ்ரா ஷப்னம், மீன்துறை ஆய்வாளர் தேன்மொழி, மீன்துறை சார ஆய்வாளர் மகேஸ்வரி, கோடகநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.